குட்டிக்கதை மூலம் அதிமுகவினருக்கு அறிவுரை வழங்கிய பூங்குன்றன்.!! - Seithipunal
Seithipunal


நீதி கதைகளின் மூலம் அதிமுகவினருக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அறிவுரை வழங்கியுள்ளார். 

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு வீட்டில் நான்கு பூனைகள் நண்பர்களாயிருந்தன. ஆனால், அவைகளுக்குள் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன.

ஒரு நாள் அப்பூனைகளுக்கு  சாப்பிட அப்பம் கிடைத்தது. அவை அதைச் சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் பூனைகள் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.

குரங்கிடம் அப்பத்தை கொடுத்து அதைச் சமமாக பிரித்துத் தரும்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பிய்த்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் அப்பத்துண்டை வைத்து நெறுத்தது. அப்போது அப்பத் துண்டு சிறிது பெரிதாக இருந்ததினால் பெரிய துண்டு இருந்த தட்டு சற்று கீழே தாழ்ந்தது. உடனே, அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டுவிட்டு மீதியை தட்டில் போட்டது. இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போது குரங்கு அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது கடித்து விட்டு மீண்டும் போட்டது.

இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ தாழ குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது. அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என மீதமுள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன.

ஆனால் குரங்கோ, மீதமிருந்த அப்பம் 'நான் இதுவரை செய்த வேலைக்கு கூலி' என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.

பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால், அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம். தங்களுக்குள் ஒற்றுமையில்லாததால் இருந்ததையும் இழந்து ஒன்னும் கிடைக்காமல் வருந்தின.

கதையின் நீதி: மனிதர்களான நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக இருந்தால், உள்ளதையும் இழக்காமல் நிம்மதியாக வாழலாம்.

இந்த கதையின் மூலம் அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்தால் யாராலும் அசைக்க முடியாது. மேலும், ஒற்றுமையாக இருந்தால் வரும் தேர்தலிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்பதை மறைமுகமாக கூறியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

J Poongunram advised for admk


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->