சேர்த்துத்துக்கொள்ள முடியவே முடியாது.. அமித்ஷாவிடம் ஆவேசமாக பேசிய எடப்பாடி! அதிர்ச்சியில் செங்கோட்டையன், டிடிவி, ஓபிஎஸ்!
Its impossible to put it together Edappadi spoke angrily to Amit Shah Sengottaiyan TTV OPS in shock
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக கூட்டணிக் கணக்குப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. இதன் மையப்புள்ளியாகிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திடீரென டெல்லி பறந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தது பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுக கடந்த சில ஆண்டுகளாகத் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் சூழலில், “சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் இணைக்காமல் வெற்றி சாத்தியமில்லை” என்று மூத்த தலைவர் செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தார். அவரே சமீபத்தில் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், எடப்பாடியின் இந்த டெல்லி பயணம் கூடுதல் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அமித் ஷா – எடப்பாடி சந்திப்பில் கட்சி ஒருங்கிணைப்பு, கூட்டணி எதிர்காலம் என பல்வேறு அம்சங்கள் பேசப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.அமித் ஷா நேரடியாக, “செங்கோட்டையனின் கோரிக்கை நியாயம்தான்… சசிகலா தரப்பினரை மீண்டும் சேர்ப்பதில் என்ன சிக்கல்?” எனக் கேட்டதாகத் தெரிகிறது.
இதற்கு எடப்பாடி பழனிசாமி உறுதியோடு,“அதிமுக ஆட்சியை கவிழ்க்க முயன்றவர்களுக்கு இடமில்லை. அவர்கள் செய்த துரோகம் மன்னிக்க முடியாது. தொண்டர்கள் மனநிலைக்கும் அதிர்ச்சி ஏற்படும். எனவே கட்சியிலும் கூட்டணியிலும் அவர்களுக்கு வாய்ப்பு இல்லை” என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம்.
அதன் பின்னரும் அமித் ஷா,“சரி, கட்சியில் சேர்க்க வேண்டாம்… ஆனால் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அவர்களுக்கு உட்பிரிவு கொடுக்கலாம். அதற்கு குறை சொல்லவா போகிறீர்கள்?” என்று மீண்டும் வினவியுள்ளார்.
அதற்கும் எடப்பாடி,“தமிழகம் முழுவதும் நான் அவர்களை ‘துரோகிகள்’ என்று சொல்கிறேன். அப்படி சொன்னவர்களுக்கே பாஜக ஒதுக்கீட்டில் பிரச்சாரம் செய்வது தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதுவும் சாத்தியமில்லை” என்று உறுதியான பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் அமித் ஷா, “அப்படியானால் தென் மாவட்டங்களில் அவர்களிடம் உள்ள வாக்குகள் நமக்கு கிட்டாது. அது திமுகவுக்கு சாதகமாக அமையாதா?” என்று கேள்வி எழுப்ப, எடப்பாடி,“அவர்களிடம் வாக்கு வங்கி எதுவும் இல்லை. மாறாக, முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்கினால், அது நம் கூட்டணிக்கு பெரிய பலம் தரும்” என பரிந்துரைத்தாராம்.
இந்த சந்திப்புக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி சென்னைக்கு திரும்பினாலும், விமான நிலையத்தில் தொண்டர்களையும் ஊடகவியலாளர்களையும் சந்திக்காமல் நேரடியாக சேலத்திற்கு புறப்பட்டார். இதனால் அவரை எதிர்பார்த்திருந்த ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.
ஒரு புறம் திமுக கூட்டணி உறுதியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதிமுகவில் இருந்து விலகிய தலைவர்கள் – சசிகலா, ஓபிஎஸ், தினகரன் – மூன்றாம் அணியாக 2026 தேர்தலில் களம் காண திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
English Summary
Its impossible to put it together Edappadi spoke angrily to Amit Shah Sengottaiyan TTV OPS in shock