பாஜகவுக்கு தர்ம சங்கடம்.! உற்சாகத்தில் எடப்பாடி& கோ.! திகைப்பில் திமுக.!  - Seithipunal
Seithipunal


இஸ்ரோ முன்னாள் தலைவரான கஸ்தூரி ரங்கனின் பொது விவகாரங்கள் மையத்தின் சார்பாக வெளியிட்டு இருக்கும் கருத்துக் கணிப்பில் அதிமுக ஆளும் தமிழகம் முதலிடத்திலும், பாஜக ஆளுகின்ற உத்தரபிரதேம் உள்ளிட்ட வட மாநிலங்கள் கடைசி இடத்திலும் இருக்கின்றது.

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் பொது விவகாரங்கள் மையம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்தியாவில் நிர்வாக செயல்திறன் மிக்க வகையில், மக்களுக்கு நல்லாட்சி வழங்குகின்ற மாநிலங்கள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறது. 

தற்போது அதற்கான தரவரிசை பட்டியலை வெளியிடபட்டுள்ளது. இதில் 1.388 புள்ளிகள் பெற்று கேரள மாநிலம் முதலிடத்திலும், தமிழகம் 0.912 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், 0.531 புள்ளிகள் பெற்று ஆந்திர மாநிலம் மூன்றாவது இடத்திலும், 0.468 புள்ளிகள் பெற்று கர்நாடகம் நான்காம் இடத்தில் இருக்கின்றது.

பாரதிய ஜனதா காட்சியினர் ஆளுகின்ற உத்தர பிரதேசம் 1.461 புள்ளியும், அதன் கூட்டணிக் கட்சி ஆளும் மாநிலங்களில் 1.158 புள்ளியும் பெற்றுள்ளன. இந்த மாநிலங்கள் மைனஸ் புள்ளிகள் பெற்று கடைசி இடம் பிடித்துள்ளது. 

யூனியன் பிரதேசங்களில் மிகவும் சிறப்பாக செயல்படுகின்ற மாநிலமாக சண்டிகர் தேர்வாகி இருக்கின்றது. ஆனால், ஜம்மு காஷ்மீர், தாதர் நகர் ஹாவேலி, அந்தமான் -நிகோபார் தீவுகள் ஆகியவை கடைசி இடத்தில் இருக்கின்றது.

இந்த பட்டியலை சமூக வலைத்தளங்களில் அதிமுக நிர்வாகிகள் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். இருப்பினும், பிற மாநிலங்களில் ஆளும் பாஜக மிகுந்த தர்ம சங்கடத்தில் இருக்கின்றது. திமுகவோ கடந்த பத்து வருடமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாதோ என்று திகைப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Isro ex president release list


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->