பெண்களை இழிவு படுத்தி பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளதா...? - திமுகவை தாக்கிய ஆதவ் அர்ஜுனா! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,"தேர்தல் விதிமுறைகளையும், ஜனநாயகத்தின் உயர்ந்த பண்புகளையும் மதிக்காமல், ‘வாக்காளர்களுக்கு ரூ.8,000 கூப்பன் வழங்கப்படும்’ என்ற பெயரில் மக்களை தவறாக வழிநடத்த முயற்சித்து வருகிறது திமுக.

தேர்தலில் வெற்றி பெற எந்த அளவிற்கும் செல்லலாம் என்ற மனப்பான்மையுடன் செயல்படும் இந்த அரசியல் அணுகுமுறை, சமூகத்தில் கவலைக்கிடமான நிலையை உருவாக்கியுள்ளது.திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரைச் சேர்ந்த ஒரு பெண், இத்தகைய சூழ்நிலையால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகும் தகவல் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

பெண்களின் சுயமரியாதையை இழிவுபடுத்தும் வகையில், பணம் அல்லது கூப்பன் மூலம் ஓட்டுகளைப் பெறலாம் என்ற எண்ணமே இந்த செயலில் பிரதிபலிக்கிறது.மேலும், அந்த கூப்பன் வழங்கும் தருணத்தில்கூட, சம்பந்தப்பட்ட பெண்மணியிடம் ஆபாசமாகவும் அவமதிப்பாகவும் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவே அந்த பெண்ணை தாங்க முடியாத மன அழுத்தத்துக்குள் தள்ளி, கடுமையான முடிவை எடுக்க வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர்கள் முதல் அடிப்படை நிர்வாகிகள் வரை பெண்களை இழிவுபடுத்தும் செயல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், இது போன்ற ஆணவ அரசியல் நடைமுறைகள் சமூகத்தில் ஆபத்தான முன்னுதாரணமாக மாறிவருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பெண்களின் மரியாதையையும் உரிமைகளையும் புறக்கணிக்கும் இந்த அணுகுமுறைக்கு, வரும் தேர்தலில் தமிழக பெண்கள் தங்களின் வாக்குகள் மூலம் உரிய பதிலடி வழங்குவார்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is it customary speak derogatorily about women Adhav Arjuna attacks DMK


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->