ஜனவரியில் ஆக்‌ஷனுக்கு ரெடியாகும் அண்ணாமலை? தவெகவை கண்காணிக்க தனிக்குழு! அண்ணாமலையின் பிளான் என்ன? - Seithipunal
Seithipunal


பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை தற்போது நடத்தி வரும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை அரசியல் ரீதியாக அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஜனவரி மாதம் முதல் அண்ணாமலை மீண்டும் அதிரடி அரசியல் களத்தில் இறங்கத் திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.

‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் மூலம் போதைப்பொருள் தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் அண்ணாமலை கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல், கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களை சந்தித்து உரையாடி வருவதுடன், அமைப்பில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அமைப்பில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பிறகு அதை அரசியல் கட்சியாக மாற்றுவது குறித்து அண்ணாமலை ஏற்கனவே பேசியிருந்த நிலையில், தற்போது சுமார் 20 லட்சம் பேர் மட்டுமே இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த கட்டமாக மிஸ்டு கால் மூலம் உறுப்பினர்களைச் சேர்க்கும் திட்டத்தை செயல்படுத்த அண்ணாமலை தரப்பு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிஸ்டு கால் மூலம் தொடர்பு கொள்ளும் நபர்களை அணுகி, அவர்களிடம் பேசி உறுப்பினர்களாக இணைக்கும் வகையில் தனி குழு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் அடுத்த கூட்டத்தில் இதற்கான பிரத்யேக தொலைபேசி எண் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்புக்கான மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை விரைவில் வெளியிடுவதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அமைப்பை கட்டமைப்பு ரீதியாக வலுப்படுத்தினால், உறுப்பினர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என அண்ணாமலை தரப்பு எதிர்பார்ப்பதாக தெரிகிறது.

அதே நேரத்தில், தவெக ஆட்சியின் செயல்பாடுகள், நிர்வாகக் குழப்பங்கள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட விவகாரங்களை கண்காணிப்பதற்காக அண்ணாமலை தரப்பில் தனி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அந்தக் குழு தகவல்களைச் சேகரித்து வருவதாகவும், உரிய ஆதாரங்கள் கிடைத்தால் ஜனவரி மாதத்துக்குப் பிறகு அண்ணாமலை தவெக அரசை கடுமையாக விமர்சிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை தவெகவை அண்ணாமலை வெளிப்படையாக கடுமையாக விமர்சிக்கவில்லை. அமைப்பை அமைதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் வலுப்படுத்துவதிலேயே தற்போது அவர் கவனம் செலுத்தி வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அடுத்த கட்டத்தில் அண்ணாமலையின் அரசியல் நடவடிக்கைகள் எந்த திசையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இடைத்தேர்தலில் போட்டியிடும் திட்டம் தமக்கு இல்லை என்பதை அண்ணாமலை ஏற்கனவே வெளிப்படையாக தெரிவித்துள்ள நிலையில், எதிர்கால உள்ளாட்சித் தேர்தல்களில் அவரது அரசியல் கணக்கு என்னவாக இருக்கும் என்பதும் தற்போது முக்கிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is Annamalai gearing up for action in January A special team to monitor TVK What is Annamalai plan


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->