வரதட்சணை வழக்கில் சிறை சென்ற வருண்குமார்... ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கவே தகுதியற்றவர் - உயர்நீதிமன்றத்தில் சீமான் பதில் மனு!
ips varunkumar ntk seeman case
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் தாக்கல் செய்த வழக்கில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் சீமான் கூறியிருப்பதாவது: “நியாயமான விமர்சனங்களையும் பொது விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாதவர், பொது பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர். வருண்குமார் பற்றி நான் கூறிய கருத்துகள் சட்டப்படி நியாயமான விமர்சனங்களாகும். அதை ‘தவறான குற்றச்சாட்டு’ எனக் கூறுவது பொருந்தாது.
மேலும், அவருக்கெதிராக வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்குச் சென்றவர் அவர் என்பதும் உண்மை. இத்தகைய பின்னணியுள்ளவர் தான் பொது விமர்சனங்களை தாங்க முடியாமல் நீதிமன்றத்தை நாடுவது ஏற்கத்தக்கதல்ல.
எனவே, என்மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் அதனை தள்ளுபடி செய்ய வேண்டும்,” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, சீமான் மேலும் தெரிவித்திருப்பதாவது: “விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாதவர் எப்படி ஒரு பொறுப்பான காவல் அதிகாரியாக பணியாற்ற முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. வருண்குமார் தனது மனநல ஆலோசனையைப் பெறும் நிலை வந்துவிட்டது,” எனவும் கூறியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
English Summary
ips varunkumar ntk seeman case