தேர்தல் தேதி எப்போது? வெளியான ரகசியம் தகவல்.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

அந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஜிவ் குமார் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

மேலும் தேர்தல் தொடர்பான புகார்கள் மீது 100 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்க செயலியை அறிமுகம் செய்துள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நடத்திய ஆலோசனைக்கு பிறகு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்துள்ளது. 

அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடிமார்ச் 4 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். மத்திய அரசு சார்பில் சென்னை துறைமுக நிகழ்வு மற்றும் கட்சி நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள இருக்கிறார். 

இந்த பயணம் நிறைவு பெற்ற பிறகு வரும் மார்ச் இரண்டாவது வாரத்தில் இந்திய மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info loksabha election date will be announced March 2nd week


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->