குடியரசு தலைவர் தேர்தல்.. இன்று வெளியாகும் பட்டியல்.!! - Seithipunal
Seithipunal


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். திரௌபதி முர்முவுக்கு தமிழகத்தில் அதிமுக, பாமக,  ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கட்சி  உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். இவருக்கு தமிழகத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் குறித்த விவரங்கள் இன்று மாலை வெளியாகும். வேட்புமனுக்களை வாபஸ் பெற ஜூலை 2ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Presidential election


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->