பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடையுங்கள்! இந்திய அரசுக்கு பறந்த அவசர கோரிக்கை!
INDIA Pakisthan BJP Subramanisawmy
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் உறவில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக பிரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இதன் பின்னர், இந்திய அரசு பாகிஸ்தானியர் விசாக்களை ரத்து செய்து, உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டது. தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சுப்ரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டு, பாகிஸ்தானை பலுசிஸ்தான், சிந்து, பஷ்தூனிஸ்தான் மற்றும் மேற்கு பஞ்சாப் என நான்கு சுதந்திர பகுதிகளாக பிரிக்க வேண்டும் என்றும், இதுவே இந்தியாவுக்கான நீண்டகாலத் தீர்வு என்றும் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தானில் தற்போது பல பகுதிகள் கிளர்ச்சியில் உள்ள நிலையில், எஞ்சிய பாகிஸ்தானை முழுமையாக ஒழித்தால் மட்டுமே இந்தியா நிலையான அமைதியை அடைய முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
INDIA Pakisthan BJP Subramanisawmy