இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு..!
India and Pakistan ceasefire Chief Minister MK Stalin welcomes
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன. நேற்றிரவு முழுவதும் மத்தியஸ்தம் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்ட நிலையில், முழு அளவில் உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட இரு நாடுகளும் ஒப்பு கொண்டு கொண்டதைஅமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அத்துடன் இன்று மாலை 05 மணி முதல் போர் நிறுத்தம் அமல் என வெளியுறவு செயலரும் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
'இந்தியா- பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்கது. நமது எல்லையை காக்கும் துணிச்சல் மிக்க வீரர்களுக்கு வணக்கம். அமைதி நிலைத்திருக்கட்டும்.' என தெரிவித்துள்ளார் .
English Summary
India and Pakistan ceasefire Chief Minister MK Stalin welcomes