இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி.. இளம் படையுடன் களமிறங்கும் இந்திய அணி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று இரவு நடைபெறுகிறது. 

இந்த தொடரில் விராட் கோலி, ரிஷாப் பண்ட் ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ், தீபக் சாஹர், கேஎல் ராகுல் காயத்தால் அணியில் இடம்பெறவில்லை. இதனால் இந்த டி20 தொடரில் இளம் வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கிடைக்கும். 

காயத்தில் இருந்து வந்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணியில் இணைந்துள்ளார். பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் மட்டுமே அனுபவசாலிகள். இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் அய்யர் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு கொடுக்கப்படும் வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தவேண்டும். பந்துவீச்சில் பும்ரா, ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், புவனேஸ்வர் குமார் உள்ளிட்டோர் மிரட்டலாக பந்துவீச காத்திருக்கின்றனர்.

இந்திய அணி : ரோகித் சர்மா (கேப்டன்) ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், வெங்கடேஷ் அய்யர், ரவீந்திர ஜடேஜா அல்லது சாஹல், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் அல்லது ஹர்ஷல் பட்டேல் புவனேஸ்வர் குமார் அல்லது அவேஷ்கான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ind vs sl first t20 match


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->