அடுத்த புயல்.. "72 மணி நேரத்தில் 11 நோட்டீஸ்".. அரசியல் கட்சியை அதிர விட்ட ஐ.டி.!! - Seithipunal
Seithipunal


வருமானவரித்துறை காங்கிரஸ் கட்சி வரியைப்பு செய்ததாக கூறி ரூபாய் 1800 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இதற்கு காங்கிரஸ் கட்சி பழைய வருமான வரி விவகாரங்களை மீண்டும் ஆய்வு செய்து அபராதம் கட்ட சொல்வது அப்பட்டமான விதிமீறல், ஜனநாயகத்தை தகர்க்கும் வேலைகளை செய்வதில் பாஜக உச்சகட்டத்தை எட்டி இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்த விவகாரம் அடங்குவதற்குள் வருமானவரித்துறையானது மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 72 மணி நேரத்தில் 11 நோட்டிஸ்களை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திரினாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் கடந்த 72 மணி நேரத்தில் 11 நோட்டீஸ்களை வருமான வரித்துறை அனுப்பியுள்ளதாக திரினாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருவது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Income tax sent 11 notice to TMC


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->