மாற்று என சொல்லி திமுகவை எதிர்த்தால் அரசியலில் காணாமல் போவார்கள்! பாஜகவுக்கு எப்போதும் நோ என்ட்ரி தான்! பொளந்து கட்டிய ஸ்டாலின்!
If they oppose DMK by saying it is an alternative they will disappear from politics BJP will always have no entry Stalin who built a palace
கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசியல் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளித்தார்.
“மாற்று, மாறுதல் என சொன்னவர்கள் தான் மறைந்து போய்விட்டார்கள்… ஆனால் திமுக மட்டும் மறையவில்லை” என்று அவர் தொடக்கத்திலேயே வலியுறுத்தினார்.
அந்நாளும் சரி… இந்நாளும் சரி… எந்நாளும் சரி… அடக்குமுறைக்கும், ஆதிக்கத்துக்கும், பாஜகவுக்கும் தமிழ்நாட்டில் ‘நோ என்ட்ரி’ தான் என்று ஸ்டாலின் தெளிவாகக் கூறினார்.
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்களை நேருக்கு நேர் எதிர்த்து வருவதாகவும், தொகுதி மறுவரையறை முதல் கவர்னர் தலையீடு வரை எதிலும் சட்ட ரீதியாக போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“மத்திய அரசு இல்லை… ஒன்றிய அரசு தான். மாநிலங்களின் வலிமையே நாட்டின் அடித்தளம்” என்று மீண்டும் வலியுறுத்தினார்.
தமிழகத்தின் தனிப்பெருமை எப்போதும் நிலைத்திருக்கப் போகிறது எனவும், தமிழர்களின் உரிமையை காக்கும் பொறுப்பு நமக்கே எனவும் அவர் உணர்ச்சியோடு பேசினார்.ஹிந்தி திணிப்பு, நீட் தேர்வு, கல்வி நிதி மறுப்பு, கீழடி தொன்மையை மறைப்பது, வாக்காளர் பட்டியலில் திருத்தம் என பல்வேறு குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டிய ஸ்டாலின் — “அடக்குமுறைக்கும், ஆதிக்கத்துக்கும், திணிப்புக்கும் நோ என்ட்ரி தான். மொத்தத்தில் பாஜகவுக்கே தமிழ்நாட்டில் நோ என்ட்ரி தான்” என்று வலுவாகக் கூறினார்.
திமுகவுக்கு மாற்று என பேசும் சிலரையும் அவர் மறைமுகமாக விமர்சித்தார்.“நாங்கள்தான் திமுகவுக்கு மாற்று என்று சொல்கிறார்கள்… ஆனால் என்ன மாற்றப்போறாங்க? தமிழக வளர்ச்சியை பின்னோக்கி இழுத்துச் செல்லப்போகிறார்களா? மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்கள் தான் மாறிப் போனார்கள்” என்ற அவர், புதிய கட்சிகளின் அரசியல் பேச்சுகளை குறிவைத்து சாடினார்.
மேலும், “நெருக்கடிகளில் தான் நாங்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்றோம். நிதி நெருக்கடி, கொரோனா போன்ற சவால்களை தாண்டி, தமிழகத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்றியுள்ளோம்” என அவர் பெருமையாகக் குறிப்பிட்டார்.
சில கட்சிகளின் பெயரை நேரடியாகச் சொல்லாமல், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் குறித்து ஸ்டாலின் மறைமுகமாக விமர்சனம் செய்தார் என்பது அரசியல் வட்டாரங்களின் பார்வை.
English Summary
If they oppose DMK by saying it is an alternative they will disappear from politics BJP will always have no entry Stalin who built a palace