“முதல்வர் ஆசை ஆரம்பத்திலேயே வந்தால், “பிரசாந்த் கிஷோருக்கு நடந்தது.. விஜய்க்கும் நடக்கும்! பீகார் தேர்தல் ஒரு பாடம்”-தமிழிசை செளந்தரராஜன்
If the desire for the Chief Minister comes from the beginning What happened to Prashant Kishor will happen to Vijay too Bihar elections are a lesson Tamilisai Soundararajan
சென்னையின் திருவேற்காட்டில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தரராஜன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து த.வெ.க தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்தார்.
பீகார் தேர்தல் முடிவு தமிழகத்துக்கு பாடம் என்று குறிப்பிட்ட அவர், SIR செயல்முறை பாஜகவுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் நன்மை செய்ததாக கூறினார். பீகாரில் வாக்காளர் நீக்கம் குறித்து எந்த எதிர்ப்பும் எழவில்லை என்றும், மக்கள் விருப்பத்தாலேயே NDA வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.
விஜய் SIR-ஐ எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறியது தவறு என்றும், ஆர்ப்பாட்டத்திற்காக திரட்டும் மக்களை SIR பூர்த்தி செய்ய உதவ பயன்படுத்தியிருக்கலாம் எனவும் தமிழிசை சாடினார். திமுக போல விஜயும் SIR குறித்து பயத்தைக் கிளப்புவதாக அவர் குற்றம் சாட்டினார்.
புதிய கட்சியாக தவெகக்கும் இது உதவும் நடவடிக்கை என்பதை உணர வேண்டும் எனவும், SIR-ஐ எதிர்த்தாலும் அது நிறுத்தப்படாது, நீதிமன்றமும் தடை செய்ய முடியாது என்று கூறினார்.
மேலும் “கட்சி தொடங்கிய உடனே முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற ஆசை வந்தால், பீகாரில் பிரசாந்த் கிஷோருக்கு நடந்தது போலவே விஜய்க்கும் நடக்கும்” என கடுமையாக விமர்சித்தார்.
திமுக தொடர்ந்து போலி வாக்காளர்களை நம்பி வெற்றி பெறுகிறது என்றும், ஜனநாயகத்தை மதிக்க முதல்வர் ஸ்டாலின் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
English Summary
If the desire for the Chief Minister comes from the beginning What happened to Prashant Kishor will happen to Vijay too Bihar elections are a lesson Tamilisai Soundararajan