தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் எப்படிக் கிடைத்தது? தவெக விஜய் கேட்ட சின்னம் என்ன?டெல்லி தந்த கிரீன் சிக்னல்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில், கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்த சின்னம் எவ்வாறு கிடைத்தது, ஏன் விசிலுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பதற்கான பின்னணி விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகம், தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) ஆணை, 1968-ன் விதிகளின் கீழ், பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாக பொதுச் சின்னம் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகியது. இதன்படி, TVK இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், விசில், ஆட்டோ ரிக்‌ஷா, மைக்ரோஃபோன் உள்ளிட்ட மொத்தம் 10 சின்னங்களின் பட்டியலுடன் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் “டெல்லி தரப்பு விஜய்க்கு எதிராக செயல்படும்” என்ற பேச்சுகள் இருந்த நிலையில், TVK தரப்பு முதன்மையாக கோரிய விசில் சின்னமே தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின்படி, பொதுச் சின்னங்கள் “முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை” என்ற அடிப்படையில் வழங்கப்படுவதால், அந்த நடைமுறையின் அடிப்படையிலேயே விசில் சின்னம் TVK-க்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விசில் சின்னத்திற்கே கட்சி அதிக முக்கியத்துவம் அளித்ததற்குப் பின்னணியும் சுவாரஸ்யமானதாக உள்ளது. 2019ஆம் ஆண்டு விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்துடன் விசில் சின்னம் மக்கள் மத்தியில் ஏற்கனவே வலுவான தொடர்பை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. எளிமையான வடிவம், ஒரே பார்வையில் அடையாளம் காணக்கூடிய தன்மை, கிராமப்புறம் முதல் நகர்ப்புறம் வரை அனைத்து தரப்பினருக்கும் எளிதில் புரியும் சின்னம் என்பதால், விசில் தான் தேர்தல் பிரச்சாரத்திற்கு மிகவும் ஏற்றது என விஜய் கருதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பேரணிகள் மற்றும் பிரச்சாரக் கூட்டங்களில் தொண்டர்கள் பயன்படுத்தவும், விநியோகிக்கவும் விசில் சின்னம் மிகவும் வசதியானது. சுவர் விளம்பரங்களில் வரைய எளிது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் (EVM) தெளிவாகத் தெரியும் என்பதும் இந்த சின்னத்திற்கு சாதகமாக அமைந்தது. அரசியல் ஆலோசகர்கள் கூறுவதுபடி, ஒரு கட்சிக்கு தேர்தல் சின்னம் என்பது வேட்பாளர் பெயருக்கு இணையான முக்கியத்துவம் கொண்டது. வாக்குப்பதிவு நாளில், சின்னத்தின் எளிமையும் பார்வையில் பதியும் தன்மையும் வாக்காளர்களின் நினைவாற்றலில் முக்கியப் பங்கு வகிக்கும்.

இந்நிலையில், விஜய்க்கு இந்த சின்னத்தை தேர்வு செய்ய ஆலோசனை வழங்கியது அவரது ஆஸ்தான ஜோதிடர் எனும் தகவலும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஜோதிட ரீதியாகவும், பிரச்சார ரீதியாகவும் விசில் சின்னம் சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பரிச்சயமான விசில் சின்னம், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தேர்தல் பயணத்தில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே இனி அரசியல் களத்தில் கவனிக்கப்படும் முக்கிய அம்சமாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How did Tamil Nadu Vetri League get the whistle symbol What was the symbol that Tvk Vijay asked for The green signal given by Delhi


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->