மீண்டும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள்., திருப்பி அனுப்பிய பள்ளி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் என்ற பலத்த பாதுகாப்புடன் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், ஹிஜாப் அணிந்துவந்த இஸ்லாமிய மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் இறுதியில், கர்நாடக மாநிலத்தின், உடுப்பி மாவட்டத்தின் சில பள்ளிகளில் ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதேபோல் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகளும் வகுப்புக்குள் அனுமதி மறுக்கப்பட்டனர். இதில் சில மாணவிகள் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். 

இதன் காரணமாக போராட்டம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று பதற்றமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில், தற்போது ஓரளவுக்கு பதற்றம் குறைந்து உள்ளதால், பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.

இதில், கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் ஒரு பள்ளியில் மட்டும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்க ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சில ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள், ஹிஜாப் கழற்றிவிட்டு பள்ளிக்குச் சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hijap issue again in mandiya district


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->