H5N1 பறவைக் காய்ச்சல் பரபரப்பு! ஹாஃப் பாயில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது! -அமைச்சர் எச்சரிக்கை
H5N1 bird flu scare It is better to avoid eating half boiled food Minister warns
சென்னையில் காகங்கள் மர்மமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மேற்கொண்ட ஆய்வில் அவை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் எச்சரிக்கை மணி ஒலிக்க, கோழிப்பண்ணைகள் மற்றும் பறவை வளர்ப்பு மையங்களில் தீவிர பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து சில காகங்கள் உயிரிழந்தது அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. மேலும், ஆய்வக சோதனையில் எச்5என்1 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், நோய் பரவலை கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளன.
இந்த வைரஸ், இடம்பெயரும் புறா, காகம், கொக்கு, நாரை போன்ற பறவைகள் மூலம் வேகமாகப் பரவக்கூடியது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. மனிதர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை.
இருந்தாலும் மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது. ஹாஃப் பாயில் போன்ற முறையில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.மேலும், இறைச்சியை நன்றாக வேகவைத்து மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.
இறந்த கோழி அல்லது பறவைகளை உண்பது கடுமையாக தவிர்க்கப்பட வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.மொத்தத்தில், பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க அரசு பல அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
English Summary
H5N1 bird flu scare It is better to avoid eating half boiled food Minister warns