திமுகவை காலி செய்ய.., அதிமுகவில் சசிகலா இணைய வேண்டும்.! பரபரப்பை உண்டாக்கிய முக்கிய புள்ளி.! - Seithipunal
Seithipunal


பொங்கல் விழாவை முன்னிட்டும், துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவை முன்னிட்டும் பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா இன்று தமிழகம் வந்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் பாஜக தலைவர் ஜேபி நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் வரும் காலம் பாஜக தான் பிரதானமாக இருக்கும். இதன் காரணமாகத்தான் பல்வேறு துறையினரும் தற்போது பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

தமிழகம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி செல்வதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் ஆகும். தமிழகம் ஒரு ஆன்மீக பூமி. மிகப்பெரிய ஆசான் திருவள்ளுவர். அவரது புகழ் நாட்டின் அனைத்து இடங்களிலும் பரவி உள்ளது." என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து பேசிய துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி, "அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக நல்ல வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி ஆளுமை உள்ளது. அதிமுக தமிழகத்தில் இல்லை என்றால் ஆன்மீகமும் தேசியமும் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.

தேசியத்தை விரும்பும் அனைவரும் அதிமுக விற்கு வாக்களிக்கம் சூழல் தற்போது உருவாகியுள்ளது. திமுகவை எதிர்க்க வேண்டுமென்றால் சசிகலா போன்றவர்களையும் அதிமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டும்" என்று ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

guru moorthy say sasikala joint to admk


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->