இரண்டே நிமிடங்களில் முடிந்த கவர்னர் உரை! தமிழக   வரலாற்றில் இதுவே முதன் முறை!! - Seithipunal
Seithipunal


கவர்னர் உரையுடன் தொடங்குவது தமிழக சட்டசபையின் மரபாக இருந்து வருகிறது. 

அந்த வகையில், 2024 ஆண்டின்  முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து உரையாற்றிய கவர்னர் ஆர்.என். ரவி 2 நிமிடங்களில் தனது உரையை நிறைவு செய்தார்.  

இந்தியாவின் தேசிய கீதம் முதலிலும், இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும், மேலும் உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால் உரையை வாசிக்க விரும்பவில்லை என்று கூறிஇரண்டே  நிமிடங்களில் கவர்னர் உரையை நிறைவு செய்தார்.

இதனை தொடர்ந்து  கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். 

பின்னர், அவை முன்னவர் துரை முருகன், கவர்னர் உரையை வாசிக்கவில்லை என்றாலும்  அந்த உரையை அப்படியே முழுவதுமாக பதிவேற்றம் செய்ய வலியுறுத்தி தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். கவர்னர், முழுமையாக அரசின் உரையை படிக்காமல் வெளியேறுவது இதுவே  தமிழக வரலாற்றில்  முதல் முறையாகும்.

இந்த நிலையில், வரும் 22- ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Governor's speech completed in two minutes! This is the first time in the history of Tamil Nadu!!


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->