நாகாக்கள் "நாய் கறி உண்பவர்களா"? ஆர்.எஸ் பாரதிக்கு ஆளுநர் ரவி கண்டனம்.!! - Seithipunal
Seithipunal


திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் நேற்று பங்கேற்ற திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ் பாரதி "நாம் எத்தனையோ ஆளுநர்களை பார்த்திருப்போம். நாம் அனுப்பும் மசோதாக்களுக்கு கூட கையெழுத்து போட முடியாது என ஆர்.என் ரவி கூறுகிறார்.

இவருக்கு நாகலாந்தில் ஏற்பட்டது என்ன என தெரியுமா? ஊரை விட்டே விரட்டி அடித்தார்கள். நாகாலாந்துக்காரன் நாய் கறி தின்பான். நாய் கறி தின்பவனே சொரணை வந்து கவர்னரை ஓட ஓட விரட்டி அடித்தான் என்றால் உப்பு போட்டு தின்னும் தமிழனுக்கு எந்த அளவுக்கு ரோஷம் இருக்கும் என்பதை கவர்னர் எண்ணி பார்க்க வேண்டும்.

அவர் நாகாலாந்தில் இருந்து அனுப்பப்பட்ட போது தீபாவளி போன்று கொண்டாடினார்கள் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஆர்.எஸ் பாரதியின் இந்த விமர்சனத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் ஆர்.எஸ் பாரதி பேசிய வீடியோவுடன் "நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் திரு. ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என திரு. பாரதியை வலியுறுத்துகிறேன். - ஆளுநர் ரவி" என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor RNRavi condemns RSBharati for insulting Nagas


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->