திமுக எம்பிக்கு ஆளுநர் மாளிகை கடும் கண்டனம்.! காரணம் என்ன.? - Seithipunal
Seithipunal


உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரசு பணம் பயன்படுத்தப்பட்டதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் விமர்சனம் செய்ததற்கு ஆளுநர் மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உதகை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தமிழக ஆளுநர் ரவியின் இல்லத் திருமண விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கான அனைத்து செலவுகளையும் தமிழக ஆளுநர் ஏற்றுக்கொண்ட நிலையில் அரசு பணத்தில் திருமண விழா நடைபெற்றதாக திமுக எம்.பி தயாநிதி மாறன் விமர்சனம் செய்திருந்தார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஆளுநர் மாளிகை "கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியின் அனைத்து செலவுகளையும் தமிழக ஆளுநரே ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் யாரும் உதகை ஆளுநர் மாளிகையில் தங்க வைக்கப்படவில்லை.

விருந்தினர்களுக்கு டீ, காபி வழங்கக்கூட உதகை ஆளுநர் மாளிகையின் சமையல் கூடம் பயன்படுத்தவில்லை. நிகழ்ச்சிக்கான மின் வசதி தனியார் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு, அலங்கார பூக்கள் தனியே சந்தையில் இருந்து வாங்கப்பட்டது. திருமண நிகழ்ச்சிக்காக உதகை ஆளுநர் மாளிகை பணியாளர்கள் யாரையும் பயன்படுத்தவில்லை" என விளக்கம் அளித்து பொறுப்பற்ற முறையில் பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பிய திமுக எம்பி தயாநிதி மாறனுக்கு ஆளுநர் மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor House strongly condemned to DMK MP DayanidhiMaran


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->