பெங்களூரு வன்முறை: போராட்டக்காரர்களுக்கு ஆப்பு வைத்த அரசு.! நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்திய அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் உள்ள புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் சமூக வலைதள பக்கத்தில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.  

இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்லாமியர்கள் நவீனை கைது செய்ய வேண்டும் என எம்.எல்.ஏ. அகண்ட மூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு எம்.எல்.ஏ.வின் வீடு மீது கற்களை வீசினர். இதனை தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார் உள்ளிட்ட வாகனங்ளுக்கு தீ வைத்தனர்.

அதே போல காவல்நிலையத்திற்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். எனினும், வன்முறை கட்டுக்குள் வராததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 60 க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். இந்த வன்முறை சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 

இந்நிலையில் வன்முறை குறித்து நீதித்துறை விசாரணை நடத்தப்படும். வன்முறையின் போது சேதமடைந்த பொதுச்சொத்துகளுக்கான தொகை வன்முறையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக அமைச்சர் பொம்பை கூறியதாவது ‘‘இதுபோன்ற வன்முறையின்போது பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தால் அதை சேதப்படுத்தியவர்களிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government announcement bangalore violence


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal