அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டி பரிசு! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த அதே விலையில் பெட்ரோல் டீசல் வழங்கினால் ஆட்டுக்குட்டி பரிசு! 

சில தினங்களுக்கு முன்பு இந்து மதத்தை பற்றி தவறாக பேசிய ஆ.ராசா குறித்து தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் சேகர்பாபு காதில் விழவில்லை என கைகளால் செய்கை செய்து பத்திரிகையாளர் கேள்விக்கு பதில் கூறாமல் நழுவி சென்றார். 

இதன் காரணமாக சில பாஜகவினர் அமைச்சர் சேகர்பாவிற்கு காது கேளாதோர் உபயோகப்படுத்தும் காது கேட்கும் கருவியை பரிசாக தபால் மூலம் அனுப்பி வைத்தனர். 

இதே பாணியில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் தகவல் அறியும் உரிமை சட்டம் அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சமையல் எரிவாயு,பெட்ரோல், டீசல் மற்றும் அத்யாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த அதே விலையில் பெட்ரோல் டீசலை பாஜக அரசு தற்பொழுது வழங்கினால் அதற்கு பரிசாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டியை பரிசளிப்போம் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இப்படி மாறி மாறி கட்சிகள் இடையே வழங்கும் பரிசினை ஏழை எளிய நலிவுற்ற மக்களுக்கு வழங்கினால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gift of lamb to Annamalai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->