சூப்பர் அறிவிப்பு! 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்…! -முதலமைச்சர் ரங்கசாமி - Seithipunal
Seithipunal


புதுச்சேரி கல்வித்துறை சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் மாணவர்களின் கல்வியை டிஜிட்டல் பாதைக்கு கொண்டு செல்லும் இந்த முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த விழாவில் கைலாஷ்நாதன் மற்றும் என். ரங்கசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு நேரடியாக லேப்டாப்களை வழங்கினர்.அதன் பின்னர் பேசிய முதலமைச்சர், “பள்ளிக் கல்வி தரமாக இருக்க ஆசிரியர்களின் பங்கு முக்கியம்.

அதனால் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் அரசு நிரப்பி வருகிறது. ஏழை மாணவர்களும் உயர்கல்வி கனவை அடைய வேண்டும் என்பதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 10% இடஒதுக்கீடு வழங்கி வருகிறோம்.

இந்தாண்டு மட்டும் 37 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து உள்ளனர்,” என்றார்.மேலும், என்ஜினீயரிங், செவிலியர் உள்ளிட்ட அனைத்து தொழில்முறை படிப்புகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, அரசு பள்ளி மாணவர்களுக்கு பட்டப்படிப்பு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள் தொழில்நுட்ப அறிவில் முன்னேற வேண்டும் என்பதால், “6-ம் வகுப்பு முதலே லேப்டாப் வழங்க வேண்டும்” என்ற கோரிக்கையை கருத்தில் கொண்டு, விரைவில் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

இதன் மூலம் புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘டிஜிட்டல் கல்வி’ ஒரு புதிய கதவாக திறக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Free laptops students from 6th standard onwards Chief Minister Rangasamy


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->