பாஜகவில் இணைந்தது ஏன்.? முன்னாள் அதிமுக எம்எல்ஏ விளக்கம்.!! ஓ.பி.எஸ்-க்கு ஷாக்.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2011 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் மயிலாப்பூர் அதிமுக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜலட்சுமி இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலுக்கு பிறகு ஓபிஎஸ் அணியில் இணைந்த ராஜலட்சுமி பின்னர் அந்த அணியின் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். 

இந்த நிலையில் பாஜகவுடன் ஓபிஎஸ் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வரும் இத்தகைய சூழலில் அந்த அணியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ராஜலஷ்மி பாஜகவில் இணைந்திருப்பது ஓபிஎஸ் தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் எம்எல்ஏ ராஜலஷ்மி திமுக முற்றிலுமாக அழிந்துக்கொண்டு இருக்கிறது. அதிமுகவில் பல முன்னாள் அமைச்சர்கள் மீது சொத்துக்குவிப்பு வழக்குகள் உள்ளன. அம்மா மறைவுக்கு பிறகு அதிமுக நிறைய மாறிவிட்டது. அதனால் எனக்கு பிடித்த கட்சியான பாஜகவில் இணைந்துள்ளேன்" என விளக்கம் அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former aiadmk mla rajalakshmi explain why joined BJP


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->