இது எனக்கு ஒரு மகத்தான மரியாதை - பொறுப்பேற்ற பின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய் சங்கர்! - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அவருடன் 72 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர். அதில் பாஜகவை சேர்ந்த 61 பேரும், இதர கூட்டணிக் கட்சிகளில் இருந்து 11 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர்.

இதையடுத்து நேற்று பிரதமர் மோடி பரிந்துரை செய்தபடி ஜனாதிபதி திரௌபதி முர்மு அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார் இதையடுத்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களுக்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர்கள் இன்று காலை முதல் தங்கள் இலாகா பணிகளை கவனிக்கத் தொடங்கினர்.

அந்த வகையில் , வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய் சங்கர் இன்று காலை டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் ஒரு அரசு தொடர்ந்து 3வது முறையாக பதவி ஏற்றுள்ளது சாதாரண விஷயம் அல்ல. 

எனக்கு மீண்டும் ஒரு முறை வெளியுறவுத்துறை மந்திரியாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது எனக்கு ஒரு மகத்தான மரியாதை. முந்தைய ஆட்சி காலத்திலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இப்போது எல்லை பிரச்சினைகளில் மேலும் கவனம் செலுத்துவோம்" என்று கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

External Affairs Minister S JaiSankar Says About His Cabinet


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->