அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவர்கள் சேர்க்கை: இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு..! - Seithipunal
Seithipunal


2025-26-ஆம் கல்வியாண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 20.06.2025 அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்த விண்ணப்பப் பதிவின் கால அவகாசம் இன்றுடன் (31.07.2025) முடிவதைக்கிறது. ஆனால், மாணாக்கர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கி வரும் நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க மாணாக்கர்களின் முதுநிலைப் படிப்பின் நலன் கருதி, இந்த ஆண்டுக்கான முதுநிலை மாணாக்கர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவினை 01.08.2025 முதல் தொடர்ந்து விண்ணப்பிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை விண்ணப்பப் பதிவு செய்யத் தவறிய மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 01.08.2025 முதல் விண்ணப்பிக்கலாம் என்றும்,  இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாணாக்கர்கள் தாங்கள் சேர விரும்பும் முதுநிலைப் பாடப்பிரிவுகளுக்கு  குறித்த இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், 31.07.2025 வரை விண்ணப்பித்த மாணாக்கர்களுக்குத் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, சிறப்பு ஒதுக்கீடு மாணாக்கர்களுக்கான கலந்தாய்வு 11.08.2025 அன்று நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். அதன் பின்னர் பொது கலந்தாய்வு 13.08.2025 அன்று முதல் தொடங்கி மாணாக்கர்களுக்கான சேர்க்கை நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

சேர்க்கைக்காக வாட்ஸ்அப் (Whatsapp) மற்றும் மின்னஞ்சல் (Email) மூலம் ஒவ்வொரு மாணாக்கர்களுக்கும் அனுப்பப்படும் என்றும், முதுநிலை மாணாக்கர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் 20.08.2025 அன்று முதல் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Extension of online application registration for admission of students in postgraduate courses in government arts and science colleges


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->