எத்தனை வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்ள தயார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ட்வீட்.!! - Seithipunal
Seithipunal


எத்தனை வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்ள தயார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ட்வீட்.!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம், விஷ சாராயம், 24 மணி நேர மது விற்பனை, சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து, தமிழக ஆளுநரிடம் புகார் அளிக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அக்கட்சியினர் பேரணியாக ஆளுநர் மாளிகை நோக்கி சென்றுள்ளார்.

பிரதான எதிர்க்கட்சி என்பதாலும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்பதாலும் இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். சுமார் 8000 பேர் இந்த பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அதனையும் மீறி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் சென்னையில் குவிய தொடங்கினர். ஆளுநர் மாளிகை அருகே பேரணி வந்த போது, போலீசாரால் அதிமுகவினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

இதற்காக சுமார் 5,500 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துஉள்ளனர். இதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், எத்தனை பிரிவுகள், எத்தனை வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். வழக்குகளை கண்டு அஞ்சுகிற இயக்கம் அஇஅதிமுக அல்ல என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex minister jayakumar tweet for case file on rally


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->