உங்க சீக்ரெட்டுகளை எல்லாம் வெளியிடுவேன்!! முதல்வரை மிரட்டும் முன்னாள் அமைச்சர்!!  - Seithipunal
Seithipunal


தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டனை அப்பதவிவிலிருந்து நீக்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து ஜெயலலிதா போலவே எடப்பாடி பழனிசாமியும் நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டார் என அதிமுகவில் பரபரப்பாக பேசப்பட்டது.

அமைச்சர் பதிவிலிருந்து தன்னை நீங்கியதால் விளக்கம் கேட்க நான் முதலமைச்சரை சந்திக்கும் எண்ணத்தில் இல்லை என சொல்லி வந்த எம்.எல்.ஏ மணிகண்டன், தற்போது முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளை தனக்கு நெருக்கமான அமைச்சர்கள் மூலம் முயற்சி மேற்கொண்டு வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் மணிகண்டனை சந்திக்க முதலமைச்சர்  பழனிசாமி மறுத்து வருகிறாராம், இதனால் முதல்வர் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் மணிகண்டன்.

முதல்வர் பழனிசாமி மீது ஏக கடுப்பில் இருக்கும்  எம்.எல்.ஏ மணிகண்டன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ரகசியங்களை டெல்லிக்கு அனுப்பி வைப்பேன் என தன்னுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர்களிடம் சொல்லி வருகிறாராம். மேலும் கொங்கு பகுதியைச் சேர்ந்த அமைச்சர்களின் சொத்து விவரங்களையும் ஆதாரத்துடன்  டெல்லிக்கு அளிக்க உள்ளாராம். இந்த செய்தி எடப்பாடி பழனிசாமிக்கும், கொங்கு பகுதியைச் சேர்ந்த அமைச்சர்களின் காதுகளுக்கும் சென்றுள்ளதாம். 

இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையப்போவதாக தகவல்கள் பரவி வந்தது. இ.பி.எஸ்  தன்னை மீண்டும் ஆழைத்து பேசாவிட்டால்  திமுகவில் சேரும் திட்டத்தில் மணிகண்டன் உள்ளாராம். இதனால் ஆளும் தரப்போ சற்று அப்செட்டில் உள்ளதாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex minister blackmail edappadi palanisami


கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
Seithipunal