சட்டப்பேரவையில் நானும் இருந்தேன்.! ஜெயலலிதா மீது தாக்குதல் நடந்தது உண்மை.!! - எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.!! - Seithipunal
Seithipunal


மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு பணி குறித்து ஆய்வு செய்வதற்காக மதுரை சென்ற அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தாக்கப்பட்டது அவர் நடத்திய நாடகம் என்றும், அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி "நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது உண்மைதான். அன்றைய நாளில் நானும் சட்டமன்றத்தில் தான் இருந்தேன். 1989 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீது சட்டமன்றத்தில்  கொடூரமான முறையில் தாக்குதல் நடந்தது. பெண் என்றும் பாராமல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா மீது தாக்குதல் நடைபெற்றது.

அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தான் அமைச்சர் ஜெயலலிதா மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதி கூறிய தகாத வார்த்தையால் தான் இந்த கொடூர சம்பவம் சட்டமன்றத்தில் அரங்கேறியது. 

தற்போதைய மூத்த அமைச்சர் ஒருவரால் ஜெயலலிதா அவர்களின் சேலை இழுத்து கிழிக்கப்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசும், அமைச்சராக இருக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனும் அம்மையார் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தாமல் தடுத்தனர். 

இந்த சம்பவம் அப்போதைய பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. அதனை அடுத்து தான் 2 ஆண்டுகளில் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் தமிழக மக்களின் பேரும் ஆதரவோடு தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். அந்த தேர்தலில் நானும் வெற்றி பெற்றேன்" முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS response to MKStalin allegation on Jayalalitha


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->