கருணாநிதி குடும்பம் என்ன அரச குடும்பமா.? சேலத்தில் எகிறிய எடப்பாடி.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி சென்றுள்ளார். கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அதிமுக கொடி ஏற்றுதல், உறுப்பினர் சேர்க்கை, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை போன்ற நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். 

இந்த நிலையில் இன்று பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி "கருணாநிதி குடும்பம் என்ன அரச குடும்பமா.? 

கருணாநிதிக்கு பின்னர் ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பின்னர் உதயநிதி, உதயநிதிக்கு பின்னர் இப்பொழுது இன்பநிதி என தமிழகத்தை ஆட்சி செய்வதற்கு" என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர் திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்து விட்டது. திமுகவில் வாரிசு அரசியல் மட்டுமே நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS question whether Karunanidhi is a royal family


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->