'தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் திமுக அரசு'; எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்..!
EPS condemns the DMK government for playing a hypocritical game to create unnecessary tension
திருப்பரங்குன்றதில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஐகோர்ட் தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறியது, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
'எம்மதமும் சம்மதம்' - எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த முதல்வர் ஸ்டாலின் மாடல் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.'' என்று அந்தப் பதிவில் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.'
English Summary
EPS condemns the DMK government for playing a hypocritical game to create unnecessary tension