ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே நடந்த காரசார விவாதம் இதுதானாம்..பரபரப்பு தகவல் வெளியானது! - Seithipunal
Seithipunal


சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,  துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே காரசார விவாதம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அதிக அளவிளான சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற வேண்டும். அதற்கு அதிமுக தொண்டர்கள் அனைவரும் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து பாடுபட வேண்டும். கட்சியின் நிர்வாக வசதிக்காக பல்வேறு மாவட்டங்களை பிரிப்பது தொடர்பாகவும், புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வது தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

மேலும் பாமக, தேமுதிக , பாஜக உள்ளிட்டகூட்டணி கட்சிகள் எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் என்ன நிலைப்பாட்டில் உள்ளனர். தற்போதுள்ள கூட்டணிக் கட்சிகளுடன் பிளவு ஏற்பட்டால் அதை சரி செய்ய பேச்சுவார்த்தை நடத்துவது. 2021 சட்டமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்தைக்கு குழு அமைப்பது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே நடந்த காரசார விவாதம் என்ன?

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து விவாதிக்க 11 பேர் கொண்ட வழிகாட்டி குழு அமைக்க வேண்டும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். ஆனால் 'வழிகாட்டி குழு அமைக்க தேவையில்லை' என, துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக, ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின் இந்த பிரச்னை குறித்து பின்னர் பேசிக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர். 

இதற்கிடையே, கூட்டம் முடிந்த பின், மூத்த அமைச்சர்கள் முதல்வர் வீட்டிற்கு சென்று, ஆலோசனை நடத்தினர். ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்ரோர் பங்கேற்றனர்.

சுமார் அரை மணி  நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக தலைமையகத்தில் நடந்த  கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps and ops argument for aiadmk cm candidate


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->