மு.க ஸ்டாலினால் காங்கிரஸின் எதிர்க்கட்சி அந்தஸ்து போச்சு.!! பரபரப்பை கிளப்பிய முக்கிய புள்ளி.!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவன தலைவருமான எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது திமுகவையும் மு.க ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்த எடப்பாடி பழனிச்சாமி. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியை விமர்சனம் செய்தார். குறிப்பாக தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அப்போது பேசிய அவர் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியை உருவாக்கினார்கள். ஆனால் இப்போது கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள் நாலாபுறமும் சிதறி கிடக்கின்றன.

மு.க ஸ்டாலின் முன்மொழியும் எந்த ஒரு விஷயமும் நடந்ததில்லை. கடந்த தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார்.

ஆனால் நடந்தது என்னவோ காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. அப்படி ஒரு ராசியான ஆள் தான் நம்முடைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS alleged mkStalin reason for Congress loss opposition


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->