விளம்பர அரசியல் போதும்...ரியல் ஆக செயல்படுங்கள்...! - கோவை சிறுமி கொலை விவகாரத்தில் அரசுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்...! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பதிவில் கடும் வேதனையுடன் கருத்து வெளியிட்டுள்ளார்.அதில் அவர் தெரிவித்ததாவது,“கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் மனஉளைச்சலையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி, அச்சம் மற்றும் கொந்தளிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை முதன்மை பொறுப்பாக ஏற்க வேண்டிய அரசு, இத்தகைய மனிதநேயமற்ற கொடூரங்களை தடுக்க தவறியுள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

சிறுமி காணாமல் போன சில மணி நேரங்களிலேயே புகார் அளிக்கப்பட்டிருந்தபோதிலும், உடனடி மற்றும் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தின் பலவீனத்தையும் செயல்திறன் குறைபாடுகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

பல மணி நேர தேடுதல் மற்றும் விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கில் தொடர்புடையதாக இருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், ஒரு அப்பாவி சிறுமியின் உயிரை பாதுகாக்க முடியாத சூழல் அரசின் அலட்சியப் போக்கையும் நிர்வாக சோர்வையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

பெண்கள் பாதுகாப்பு குறித்து வெறும் விளம்பர அரசியலில் மட்டுமே ஈடுபடாமல், நிலையான பாதுகாப்பு கட்டமைப்புகளையும் பயனுள்ள தடுப்பு நடவடிக்கைகளையும் உருவாக்குவதில் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும். சமூக வலைதள காட்சிப்படுத்தல்களில் மட்டும் திகழும் ஆட்சியாக அல்லாமல், மக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பான ஆட்சியாக அரசு செயல்பட வேண்டும்.

இந்த மனிதாபிமானமற்ற அரக்கச் செயலை வன்மையாக கண்டிப்பதுடன், சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

மேலும் இனி இதுபோன்ற கொடூரங்கள் நடைபெறாத வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடி, உறுதியான மற்றும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Enough publicity politics act realistically EPS strongly condemns government Coimbatore girl murder case


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->