#BigBreaking || இரட்டிப்பு பணம்.., விசிக கவுன்சிலர் வீடு, மாமியார் வீடுகளில் ரெய்டு.!
எelvin raid vck
திருச்சி சேர்ந்த விசிக கவுன்சிலர் வீடு உள்ளிட்ட 50 இடங்களில் போலீசார் சோதனை மேல் கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து வெளியான முதல் கட்ட தகவல் படி, திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு 'எல்பின்' என்ற தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.
இந்த நிதி நிறுவனத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தலைமையேற்று இந்த நிதி நிறுவனத்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிதி நிறுவனத்தில் பணம் போட்டால் குறுகிய காலத்தில் இரட்டிப்பாக திருப்பி தரப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் பெயரில் மக்கள் ஆயிரம் ரூபாய் முதல் லட்ச கணக்கில் பணத்தை முதலீடு செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில், இந்த நிதி நிறுவனம் திருப்பி தருவதில் காலம் தாழ்த்தியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து ஏமாந்த பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

அதன்பெயரில், கடந்த ஆண்டுகளிலும் இந்த நிதி நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்ட நிலையில், இன்று தமிழகம் முழுவதும் தற்போது சோதனை நடைபெறுகிறது.
குறிப்பாக திருச்சியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்ட வருகிறது. இதில் விடுதலை சிறுத்தை கட்சியின், தொழிலாளர் விடுதலை மாநில துணைச் செயலாளராக இருக்கக்கூடியவரும், திருச்சி மாநகராட்சி உடைய 17 வது வார்டு கவுன்சிலர்ருமான பிரபாகரபாகரன் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அவருடைய மாமியார் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.