அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஆப்பு., பாஜக நபர் தொடர்ந்த வழக்கு., களத்தில் இறங்கிய உச்சநீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


மக்கள் வரிப்பணத்திலிருந்து இலவசங்களை தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று, பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அவரின் அந்த மனுவில், "இலவசங்களை அறிவிப்பது அரசியல் கட்சிகள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, வாக்காளர்களுக்கு கொடுக்கக்கூடிய லஞ்சம் போன்ற செயலாகும். 

ஜனநாயக நடைமுறையை பாதுகாக்க இதுபோன்ற அறிவிப்புகளை தடை செய்ய வேண்டும். இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் மக்களுக்கு இலவசங்களை அறிவிப்பது என்பது, இந்தத் தேர்தலின் நேர்மையை பாதிக்கும் தீவிரமான ஒரு பிரச்சனையாகும். இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ELECTION MANIFETO ISSUE INDIAN SC


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->