பரபரப்பு... அமைச்சர் காரில் இருந்தது என்ன? சுற்றி வளைத்த தேர்தல் பறக்கும் படை.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தமிழக முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த சோதனையில் நாள்தோறும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ரொக்கம் நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுவதோடு தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா மற்றும் போதை பொருட்களும் சிக்கி வருகின்றன. 

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பது அமைச்சர் காரையும் சுற்றி வளைத்து சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடம்பூண்டி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்த போது அவழியாக வந்த பொது பணித்துறை அமைச்சர் எ.வ வேலுவின் காரை சுற்றி வளைத்த அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் எதுவும் சிக்காததால் அமைச்சர் ஏவா வேலுவின் கார் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டு மீண்டும் புறப்பட்டு சென்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election frying squad searching in minister ev velu car


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->