தேர்தல் ஆணையத்திற்கு " என்மேல பயம் "..சீமான் ஆவேச பேச்சு.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது நாம் தமிழர் கட்சி. 40 தொகுதிகளிலும் வேட்பாளர் நிறுத்தி உள்ளது நாம் தமிழர் கட்சி.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கின்ற நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் வேட்பாளர்கள் ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து நாம்  தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சீமான் பேசுகையில், பீகார் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஒரே கட்டமாக நடைபெறுவதற்கான காரணம் நாம் தமிழர் கட்சி மீது உள்ள பயம்தான் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election Commission Seeman passionate speech


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->