வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த 19 ஆம் தேதி முதல் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ம் தேதியான இன்று எண்ணப்படுகின்றன. இதனை முன்னிட்டு அந்த பணிகள் எவ்வாறு நடைபெறும்? என்பது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வழிமுறைகள் வெளியிட்டுள்ளது. அதாவது:-

* தேர்தல் நடத்தை விதிகள் 1961-ன் விதி 54 ஏ பிரிவின் கீழ், முதலில் தேர்தல் நடத்தும் அலுவலரின் மேஜையில் தபால் வாக்குச் சீட்டுகள் எண்ணும் பணி தொடங்கப்படும்.

* எண்ணும் பணி தொடங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தேர்தல் அலுவலரால் பெறப்பட்ட தபால் ஓட்டுகள் மட்டுமே எண்ணுவதற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

* தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி 30 நிமிடங்களுக்குப் பிறகு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்பட வேண்டும்.

* குறிப்பிட்ட தொகுதியில் தபால் வாக்குகள் இல்லை என்றால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை திட்டமிட்ட நேரத்தில் தொடங்கலாம்.

* வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகு மட்டுமே வாக்குகளை எண்ணுவதற்கு படிவம் 17சி உடன் தேவை.

* மின்னணு எந்திரங்களின் கட்டுப்பாட்டு அலகுகளின் முடிவை கண்டறிவதற்கு முன், எண்ணும் அதிகாரிகள் அவற்றில் உள்ள காகித முத்திரை அப்படியே இருப்பதையும், மொத்த வாக்குகள் படிவம் 17சி-யில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கணக்கிடுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

* கட்டுப்பாட்டு அலகின் முடிவு, வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், நுண் பார்வையாளர் மற்றும் வேட்பாளர்களின் எண்ணும் முகவர்களுக்குக் காட்டிய பிறகு, படிவம் 17சி-யின் பகுதி-II இல் குறிப்பிடப்படும்.

* கட்டுப்பாட்டு அலகின், திரையில் முடிவுகள் காட்டப்படாவிட்டால், அந்தந்த வி.வி.பேட் எந்திரத்தில் பதிவானசீட்டுகள் அனைத்து கட்டுப்பாட்டு அலகுகளின் எண்ணிக்கையும் முடிந்த பிறகு கணக்கிடப்படும்.

* ஒவ்வொரு கட்டுப்பாட்டு அலகின் வேட்பாளர் வாரியான முடிவும் படிவம் 17சியின் பகுதி II இல் குறிப்பிடப்பட்டு, எண்ணும் மேசையில் இருக்கும் வேட்பாளர்களின் எண்ணும் மேற்பார்வையாளர் மற்றும் எண்ணும் முகவர்களால் கையொப்பமிடப்படும்.

* ஒவ்வொரு வாக்குச்சாவடியின் படிவம் 17சி படிவம் 20 இல் இறுதி முடிவு தாளை தொகுக்கும் அதிகாரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

* மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகுகளின் வாக்குகளை எண்ணி முடித்த பின்னரே வி.வி.பேட் சீட்டுகளை எண்ணும் பணி தொடங்கும்.

* ஒரு சட்டமன்றத் தொகுதி/ஒரு நாடாளுமன்றத் தொகுதியின் ஒவ்வொரு சட்டமன்றப் பிரிவுக்கும் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 வாக்குச் சாவடிகளின் வி.வி.பேட் சீட்டுகளின் கட்டாயச் சரிபார்ப்பு வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரே மேற்கொள்ளப்படும்.

* நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையை விட வெற்றியின் வித்தியாசம் குறைவாக இருந்தால், அத்தகைய நிராகரிக்கப்பட்ட அனைத்து தபால் வாக்குச் சீட்டுகளும் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன் கட்டாயமாக மீண்டும் சரிபார்க்கப்பட வேண்டும்.

* இரண்டு வேட்பாளர்களும் சம எண்ணிக்கையிலான அதிக வாக்குகளைப் பெற்றால், குலுக்கல் முறை மூலம் முடிவு அறிவிக்கப்படும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election commission restriction published for vote counting


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->