மிகுந்த பீதியில் அரசியல் கட்சிகள்.! இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஒரு கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறவேண்டும் எனில் போட்டியிடும் தேர்தல்களில் அக்கட்சி குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் இருக்கிறது. 

அப்படி போட்டியிடும் கட்சி தனியாகவோ அல்லது கூட்டணியாகவோ சேர்ந்து போட்டியிட்டாலும் கூட குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெற வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. இப்படிப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் அந்த கட்சிகளுக்கு மாநில அளவிலோயோ அல்லது தேசிய அளவிலோயோ அங்கீகாரம் கிடைக்கும். 

இந்த நிபந்தனைகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் பூர்த்தி செய்ய தவறினால், அந்த கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கும். அந்த வகையில், கடந்த ஜூன் மாதத்தில் 111 கட்சிகளின் அங்கீகாரங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இத்தகைய சூழலில் மேலும் அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இன்று ஒரு அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், ஆணையத்தின் அங்கீகாரம் கோரி பதிவு செய்துவிட்டு தொடர்ந்து ஆறு வருடங்கள் தேர்தலில் போட்டியிடாமல் இருக்கும் கட்சிகளின் பதிவானது ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இது பல லெட்டர் பேடு கட்சிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election commission new announcement makes shock


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->