நாளையுடன் நிறைவடையும் தேர்தல் பிரச்சாரம்..பரபரக்கும் தேர்தல் களம்.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி வேட்பாளரும் தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை தீவிர படுத்தி உள்ளனர்.

வழக்கமாக தேர்தல் வாக்குபதிவு தொடங்கும் நேரத்தில் இருந்து 48 மணி நேரம் முன்பாக தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும். ஏப்ரல் 17 மாலை 5 மணி உடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் ஒரு மணி நேரம் நீட்டிப்பு வழங்கி உள்ளது. ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணிவுடன் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தேர்தலில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். விளங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நால்முனை போட்டி நிலவுகிறது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 17,18,19 நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளில் விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elected propaganda tomorrow finish


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->