'மீண்டும் மக்களை ஏமாற்றும் அறிவிப்புகள்'; மு.க.ஸ்டாலினின் தேர்தலை அறிக்கையை விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி..!
Edappadi Palaniswami criticizes MK Stalin stating that he has once again issued announcements intended to deceive the public
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சிவகாசியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுக 525 வாக்குறுதிகள் கொடுத்தது. அதில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. இப்போது மீண்டும் அறிவிப்பு கொடுத்திருக்கிறார் இவையும் மக்களை ஏமாற்றும் அறிவிப்புகள் தான் என்று விமர்சித்துள்ளார்.
இந்த பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி மேலும் பேசியதாவது; சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், நான் வரும்போது குழந்தைகள் பனியன் காட்டினார்கள். என்ன எழுதி இருக்கிறது என்று பாருங்கள். மீண்டும் அதிமுக ஆட்சி தான் பெண்களுக்கு பாதுகாப்பு, திமுக இனி எப்போதும் எங்களுக்கு வேண்டாம் என்று எழுதப்பட்டுள்ளது. நான் ஹோட்டலில் இருந்து வெளியே வரும் போது குழந்தைகள் இதை எழுதி என்னிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக 525 வாக்குறுதிகள் கொடுத்தது. அதில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. இப்போது மீண்டும் அறிவிப்பு கொடுத்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளதோடு, கல்விக் கடன் ரத்து செய்யவில்லை, கேஸ் மானியம் கொடுக்கவில்லை, பெட்ரோல், டீசல் விலை குறைக்கவில்லை, 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயர்த்தவில்லை. இப்போது மீண்டும் புது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இவையும் மக்களை ஏமாற்றும் அறிவிப்புகள் தான் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
English Summary
Edappadi Palaniswami criticizes MK Stalin stating that he has once again issued announcements intended to deceive the public