எடப்பாடி மீது பாய்ந்த கமல்ஹாசன்.! எதிர்பாராத தாக்குதலால் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் வருவதை முன்னிட்டு பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், அம்மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சிக்கு வரும் பட்சத்தில், பொதுமக்கள் அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி போட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் புதுகோட்டையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரொனா வைரஸுக்காக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த உடன் தமிழக மக்கள் அனைவருக்கும், தமிழக அரசின் செலவில் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் முதல்வரின் இந்த பேச்சு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் 'எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர். இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள். 

ஐயா ஆட்சியாளர்களே,தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து. அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல. மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்ட நீங்கள், இன்று அவர்கள் உயிருடனும் விளையாடத் துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும்.' என்று கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

edappadi palanisamy got nose cut from kamala hasan


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->