திமுக அமைச்சருக்கு நெருக்கமான கரிகாலனை கட்டம் கட்டிய ED அதிகாரிகள்! அதிரும் புதுக்கோட்டை!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு அலுவலகம் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் நேற்று காலை 8 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். நேற்று தொடங்கிய இந்த சோதனையானது இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த ஆவணங்களின் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசு மணல் குவாரிகளை டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த தொடர் புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தில் உள்ள ரத்தனத்தின் நெருங்கிய உறவினரான கரிகாலன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை செய்து வருகின்றனர். இவர் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படுகிறார். அமைச்சர் துரைமுருகனின் மகனும் வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் வெளிநாடு சென்றபோது கரிகாலனும் உடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் இந்த சோதனை மேலும் பல இடங்களுக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED raid Ramachandran cousin Karikalan house


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->