கவலைப்படாதீங்க! தெர்மாகோல் போட்டு மூடி வச்சு இருக்கோம்! - செல்லூர் ராஜூவை பங்கம் செய்த துரைமுருகன்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறை மீதான விவாதத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் நேரு ஆகியோர் பதில் அளித்தனர்.

அந்த வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு கடந்த திமுக ஆட்சியில் மதுரை மக்களுக்கு தங்கு தடையின்றி சுத்தமான நீர் கிடைப்பதற்காக முல்லை பெரியாறு அணையிலிருந்து 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த திட்டம் தற்போது ஆமை வேகத்தில் மெதுவாக நடைபெற்று வருகிறது. மேலும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த திட்டம் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், ஆனால் இதுவரை குடிநீர் சேகரிப்பு தொட்டிகள் கூட கட்டி முடிக்காத நிலையில் தான் இருக்கிறது. மேலும் தற்பொழுது விநியோகிக்கப்படும் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால் அதனை சரி செய்து குடும்ப பெண்கள் வீட்டை விட்டு வெளியேறாத வகையில் வீட்டுக்குள்ளேயே குடிநீரை பிடித்துக் கொள்ளும் வகையில் கொண்டு வரப்பட்ட திட்டத்தை அமைச்சர் விரைந்து முடித்துக் கொடுப்பாரா? என கிண்டலாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் நேரு "பெரியார் அணையை நீராதாரமாக கொண்டு கம்பன் நகர் முதல் மதுரை மாநகராட்சி வரை குடிநீர் கொண்டு செல்வதற்கான திட்டம் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தை அவர்கள் ஆரம்பித்தார்களே தவிர அங்கு கிணறு தோண்டுவதற்கான வனத்துறையினரின் அனுமதியை பெறவில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வனத்துறையினரின் அனுமதி பெற்று கிணறு அமைத்து 60 கிலோமீட்டர் குழாய் அமைக்கும் பணியில் தற்பொழுது 15 கிலோமீட்டர் மட்டுமே நிலுவையில் உள்ளது. 

வைகை ஆற்றின் கரை ஓரமாக கட்டப்பட்டுள்ள பெரிய பூத் தொட்டியை காட்டியுள்ளோம். அதை நீங்கள் பார்த்துவிட்டு வாங்க. எனவே நீர் தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு விட்ட நிலையில் மீதமுள்ள குழாய் பதிக்கும் பணி கூடிய விரைவில் முடிக்கப்பட்டு தமிழக முதல் மு.க ஸ்டாலின் மதுரை மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் இந்த திட்டத்தினை தொடங்கி வைப்பார்" என பதிலளித்தார்.

அப்போது திடீரென என்ட்ரி கொடுத்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவரது பாணியில் "தண்ணி உங்களுக்கு நிச்சயமாக கொடுப்பார். அந்த தண்ணி காலியாகம இருப்பதற்கு தெர்மாகோல் போட்டு மூடி வச்சிருக்கோம். ஒன்னும் கவலைப்படாதீங்க" அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை பங்கமாக கலாய்த்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Duraimurugan teased Sellur Raju in TNassembly


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->