திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்களா வன்னியர்கள்?! பகிரங்கமாக குற்றச்சாட்டும் டாக்டர் ராமதாஸ்!  - Seithipunal
Seithipunal


கடந்த 5 ஆண்டுகளாக தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக வன்னியர்கள் நியமிக்கப்படவில்லை என டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இது குறித்து இன்று அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் "தமிழ்நாட்டில் 21 அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக அவற்றில் ஒரு பல்கலைக்கழகத்தில் கூட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்படவில்லை. தகுதியானவர்கள் ஏராளமாக இருந்தும் புறக்கணிப்பு தொடர்கிறது. 

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அடுத்த மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்து துணைவேந்தர் நியமிக்கப்படுகிறார்.  உள்ளூரில் வன்னியர் சமுதாயத்தில் தகுதியான பேராசிரியர்கள் இருந்தும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.  இதுவா சமூக நீதி?  இந்த அநீதி முடிவுக்கு வருவது எப்போது?" என பதிவிட்டுள்ளார். 

இதேபோல டி.என்.பி.எஸ்.சி.யிலும் வன்னியர்கள் யாரும் இரண்டு வருடங்களாக இல்லை என டாக்டர் ராமதாஸ் நேற்று குற்றஞ்சாட்டியுள்ளார். அதில், " தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்துவதற்கான அமைப்புகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மிகவும் முக்கியமானது. ஆனால், அந்த அமைப்பில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை.  

இது தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு 27.11.2019 அன்று மனு அளித்தோம். சமூகநீதி அமைப்பில் பெரும்பான்மை சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல்  உண்மையான சமூகநீதி எவ்வாறு மலரும்?" என பதிவிட்டிருந்தார். 

சமூகநீதி பேசுபவர்களாக இருந்தாலும் சரி, தேர்தலுக்கு தேர்தல் வன்னியர்களின் வாக்குகளுக்காக வாக்குறுதி அளிக்கும் கட்சிகளாக இருந்தாலும் சரி, டாக்டர் ராமதாசை தவிர்த்து யாருமே, புறக்கணிக்கப்படும் வன்னியர்களுக்காக குரல் கூட  கொடுக்கவில்லை என்பதே வன்னியர்களின் மனதில் வடுவாக இருக்கிறது.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss said last 5 years vanniyars not appointed as vice chancellor


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->