அதிமுக கூட்டணியில் முக்கிய தலைவர் மரணம்! பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைவதாக டாக்டர் ராமதாஸ் இரங்கல்! - Seithipunal
Seithipunal


த.மா.கா மூத்த தலைவர் ஜி.ஆர். மூப்பனார் மறைவுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அதன் தலைவர் ஜி.கே.வாசனின்  சித்தப்பாவுமான ஜி.ஆர். மூப்பனார் என்று அழைக்கப்பட்ட ஜி.ரங்கசாமி மூப்பனார் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

மறைந்த தலைவர் ஜி.கே. மூப்பனாரின் இளைய சகோதரரான ஜி.ஆர். மூப்பனார் கல்வி, கலை, ஆன்மிகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். திருவையாறு ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபையின் தலைவராக இருந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். பாரதியார் பேரவையின் தலைவராக செயல்பட்டு பாரதியாரின் பெருமைகளை பரப்பி வந்தார். பார்க்கவ குல சங்கத்தின் மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்து அச்சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக உண்மையாக பங்களித்து வந்தார்.

ஜி.ஆர். மூப்பனாரின் மறைவு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் இது பேரிழப்பு ஆகும். ஜி.ஆர். மூப்பனாரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss mourning G Rangasamy moopanar demise


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->