பூமித்தாயை மகிழ்விக்கும் இந்த பணி., பெரும் மகிழ்ச்சியில் மருத்துவர் இராமதாஸ்.!  
                                    
                                    
                                   Dr Ramadoss FB post For Tree Plant 
 
                                 
                               
                                
                                      
                                            பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 
"ஒரு மாதம்... 186 பாட்டாளிகளின் பிறந்தநாள்...
நடப்பட்ட 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்... 
தொடரட்டும் பூமித்தாயை மகிழ்விக்கும் பணி!
மரம் நடும் அறமே மாபெரும் அறம் என்பதற்கிணங்க பாட்டாளிகள் அனைவரும் தங்களின் குடும்ப உறுப்பினர்களின் பிறந்தநாளையொட்டி மரம் நட வேண்டும்; அவ்வாறு மரம் நடும் பாட்டாளிகள் என்னை தொடர்பு கொண்டால் அவர்களுடன் உரையாடுவேன் என்று கூறியிருந்தேன். 

அதைப் பின்பற்றி பாட்டாளிகள் பலரும் தங்களின் பிறந்தநாளுக்கும், குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் பிறந்தநாளுக்கும் மரக்கன்றுகளை நட்டு, அது குறித்த விவரங்களை என்னுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
கடந்த நவம்பர் 30-ஆம் நாளில் இந்த பணி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.  
அன்று முதல் இன்று 31.12.2021  வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் 186 பாட்டாளிகள் தங்களின் பிறந்தநாளில் மரக்கன்று நட்டு என்னிடம் வாழ்த்து பெற்றனர். சிலர் ஒரு மரக்கன்று நட்டனர்... பலர் பத்து மரக்கன்றுகளை நட்டார்கள். சிலர் ஐம்பது மரக்கன்றுகள் வரை நட்டார்கள். அவை அனைத்தையும் சேர்த்து இதுவரை 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இந்த புள்ளிவிவரங்களை தேடித்தேடி கணக்கீட்ட போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இந்த உலகில் தொழில்புரட்சி, வணிக வளர்ச்சி என பூமித்தாய் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றால் காயம்பட்ட பூமித்தாய்க்கு மருந்து போடும் பணி தான் இந்த மரக்கன்று நடும் பணி ஆகும். பூமித்தாயை மகிழ்விக்கும் இந்த பணியை பாட்டாளிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து  தொடருவோம்.
மரம் நடும் அறமே மாபெரும் அறம்!" இவ்வாறு மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 
                                     
                                 
                   
                       English Summary
                       Dr Ramadoss FB post For Tree Plant