இருள் விலகி ஒளி பிறக்கட்டும் - அன்புமணி இராமதாஸ், டிடிவி, கமல் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து! - Seithipunal
Seithipunal


பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், "இருள் விலகி ஒளி பிறக்க புத்தாண்டு வகை செய்யட்டும்!

ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை  கொண்டாடும் சொந்தங்கள் அனைவருக்கும்  இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தாண்டு பிறப்பு என்பது ஆண்டுக்கு ஒரு முறை வழக்கமாக வந்து போகும் நிகழ்வல்ல. ஒவ்வொரு ஆண்டும் மனிதகுலத்தின் மனதில் புத்துணர்வையும், புது நம்பிக்கையையும் விதைப்பதற்கான உன்னத திருநாள் ஆங்கிலப் புத்தாண்டு ஆகும். ஓராண்டில் ஆயிரமாயிரம் ஏமாற்றங்கள், வருத்தங்கள், கவலைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் நாட்காட்டியுடன் சேர்த்து ஒதுக்கி வைத்து விட்டு, புதிதாக பிறக்கப் போகும் ஆண்டில் எத்தனை சவால்கள் வந்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து நின்று வீழ்த்தும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் நமக்கு அளிப்பது புத்தாண்டு தான். அதை எவரும் மறுக்க முடியாது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகமும் கடந்த சில ஆண்டுகளாக அடுத்தடுத்து நெருக்கடி மற்றும் பின்னடைவுகளையே சந்தித்து வருகிறது. வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட விஷயங்களில் தமிழகத்தின்  உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையை மாற்றி தமிழகத்திற்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வகை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றின் மீது படிந்த இருள் விலகி, ஒளி பிறக்க ஆங்கிலப் புத்தாண்டு வகை செய்யப்பட்டும். புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், ஆனந்தம், வளர்ச்சி, அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று கூறி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை  புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், "இனம், மதம், மொழி, நாடு ஆகியவற்றையெல்லாம் தாண்டி உலகெங்கும் மக்கள் கொண்டாடும் புத்தாண்டில் அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒவ்வோர் ஆண்டும் பிறக்கிறபோது புத்தம்புது நம்பிக்கைகளும் வெளிச்சக் கீற்றுகளும் சேர்ந்தே பிறக்கின்றன. புதிய சாதனைகள் புரிவதற்கான பாதைகளும் ஒவ்வொருவர் வாழ்விலும் உருவாகின்றன.

இந்நன்னாளில் அனைவரின் கனவுகளும் நனவாக வழிபிறக்கட்டும். எல்லாவற்றுக்கும் அடிப்படையான நலமும் வளமும் அனைவரின் வாழ்விலும் பெருகட்டும். மகிழ்ச்சியும் மனநிறைவும் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிறையட்டும்.

தமிழ்நாட்டின் நலன்களையும், தமிழகத்தின் உரிமைகளையும் காத்து நிற்பதற்கான வலிமையைப் புத்தாண்டு தந்திடட்டும். தொழில்களும், விவசாயமும் செழித்தோங்கி, எல்லா வகையிலும் சிறந்த ஆண்டாகவும் உற்சாகம் தருகிற ஆண்டாகவும் 2023 திகழட்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்." என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், "ஆண்டுக் கணக்கில் ஒன்று கழிந்தது. புதிய ஒன்று நம்பிக்கை வாசல் வழியாகப் புகக் காத்து நிற்கிறது. திட்டங்கள் உருவாகட்டும்.

அவற்றைச் செயலாக மாற்றும் ஊக்கம் பிறக்கட்டும். புத்தாண்டு என்பது நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம். அனைவருக்கும் என் வாழ்த்து" என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani TTV Kamal Wish New year 2023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->